» சினிமா » செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் கொடுமையைக் கண்டித்து போராட்டம்: நடிகை ஸ்ரீரெட்டி முடிவு

திங்கள் 18, மார்ச் 2019 5:25:39 PM (IST)

பொள்ளாச்சி பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராட முடிவு செய்திருப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கியது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி பெண்கள் அமைப்பினரும் மாணவ, மாணவிகளும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் கண்டித்து வருகிறார்கள்.

தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டியும் பொள்ளாச்சி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது: "பொள்ளாச்சி சம்பவம் 7 வருடங்களாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. பெண்கள் இதுபோன்ற குற்றங்களை மூடி மறைக்காமல் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். புகார் அளிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்கும். இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராட முடிவு செய்து இருக்கிறேன்.

விரைவில் போலீஸ் அதிகாரிகளையும் அரசியல் வாதிகளையும் இந்த பிரச்சினை தொடர்பாக சந்தித்து பேச இருக்கிறேன். பாதிக்கப்பட பெண்களையும் நேரில் சந்திக்க விரும்புகிறேன். நம் நாட்டில் இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். அதற்கான சட்டங்களை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால்தான் இதுபோன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க முடியும்.” இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory