» சினிமா » செய்திகள்

மன்மதன் இஸ் பேக் : உடல் எடை குறைத்து சிம்பு வெளியிட்ட புகைப்படம்!

புதன் 20, மார்ச் 2019 5:20:41 PM (IST)

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு கடந்த சில வருடங்களாகவே உடல் எடை கூடி குண்டாக இருந்து வந்தார் இதனால் இவருக்கு படவாய்ப்புகளும் இல்லாமல், நடிக்கும் படங்களுக்கும் வெற்றியடையாமல் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வந்தார்.  

அன்பானவன் அசாராதவன்  அடங்காதவன் படத்திற்கு எடையை கூட்டிய சிம்புவுக்கு லக் அடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த செக்கச் சிவந்த வானம் திரைப்படம் ஒரு நல்ல கம் பேக் ஆக அமைந்தது.  ஆனால், அந்த படத்திற்கு பின்னர் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தைப் பெற்றது. அப்படத்தில் சிம்பு குண்டான தோற்றத்தில் இருந்ததாக சொல்லி  கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார்.
 
இதனால் செம்ம கடுப்பான சிம்புவுக்கு அவரது ரசிகர்களே உடல் எடையை குறைத்து பழைய சிம்புவாக மாற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். அதனால் தனது உடல் எடையை குறைக்க லண்டன் புறப்பட்ட சிம்பு அங்கேயே தங்கி சிகிச்சை எடுத்து உடல் எடை குறைத்திவிட்டாரம். நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய அவர் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதில் சிம்பு உண்மையிலேயே சிலிம்மாக தோற்றமளிக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த சிம்புவின் ரசிகர்கள் ஒரே குஷியாகிவிட்டனர். தற்போது சிம்புவும் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஒல்லியான பழைய சிம்புவாக தோற்றமளிப்பார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory