» சினிமா » செய்திகள்

விஜய் சேதுபதி - ஸ்ருதி ஹாசன் நடிக்கும் லாபம்: பூஜையுடன் தொடக்கம்!!

திங்கள் 22, ஏப்ரல் 2019 3:46:38 PM (IST)



எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி -  ஷ்ருதி ஹாசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

2015-ல் வெளியான புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் லாபம் என்கிற படத்தை இயக்குகிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷ்ருதி ஹாசன் நடிக்கிறார். 2017-ல் சிங்கம் 3 படத்தில் நடித்த ஷ்ருதி, 2 வருடங்கள் கழித்து நடிக்கவுள்ள தமிழ்ப் படம் இது.  லாபம் படத்தின் படப்பிடிப்பு ராஜபாளையத்தில் இன்று தொடங்கியுள்ளது. இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory