» சினிமா » செய்திகள்

மீண்டும் காமெடி ஹாரர் ஜானருக்கு திரும்பிய சுந்தர்.சி!!

செவ்வாய் 30, ஏப்ரல் 2019 4:13:04 PM (IST)

சுந்தர்.சி இயக்கத்தில் வெற்றி பெற்ற அரண்மனை, அரண்மனை 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து, அதன் மூன்றாம் பாகமும் தயாராகி வருகிறது.

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேதரின் தெரஸா, ரம்யா கிருஷ்ணன் நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் கடைசியாக வெளியானது. தெலுங்கில் வெற்றிபெற்ற அத்தாரங்கடி தாரேதி படத்தின் ரீமேக்கான இப்படம், ரசிகர்களை ஈர்க்கத் தவறியது. தற்போது விஷால், தமன்னா நடிக்கும் புதிய படத்தை இயக்கிவரும் சுந்தர்.சி, அதன் பாடல் மற்றும் முக்கிய காட்சிகளை துருக்கி நாட்டில் படமாக்கிவருகிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில், சுந்தர்.சி இயக்கி வெற்றி பெற்ற அரண்மனை, அரண்மனை 2 படங்களின் அடுத்த பாகமாக அரண்மனை 3 படத்திற்கான திரைக்கதை பணிகள் தொடங்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. காமெடி கலந்த பேய் படமான அரண்மனைக்கு, காஞ்சனா திரைப்படங்களின் வரவேற்பு போலவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது காஞ்சனா 3யின் வெற்றி, ரசிகர்களின் காமெடி ஹாரர் ஜானருக்கான எதிர்பார்ப்பை மீண்டும் நிரூபித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory