» சினிமா » செய்திகள்

தங்க மங்கை கோமதிக்கு விஜய் சேதுபதி ரூ. 5 லட்சம் நிதியுதவி!!

செவ்வாய் 30, ஏப்ரல் 2019 5:24:27 PM (IST)

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு, விஜய் சேதுபதி ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார். திருச்சி மாவட்டம் முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த கோமதியின் இந்தச் சாதனையை, பலரும் பாராட்டி வருகின்றனர்.அவர் தங்கம் வென்ற செய்தி வெளியானதும், ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்குவதாக முதன்முதலில் அறிவித்தார் ரோபோ சங்கர். அதேபோல், சென்னை வந்த கோமதி மாரிமுத்துவிடம், ஒரு லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார்.

இந்நிலையில், விஜய் சேதுபதி 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‘லாபம்’ படத்தில் தற்போது நடித்துவரும் விஜய் சேதுபதி, தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். மேலும், படப்பிடிப்பில் இருந்தவாறே செல்போனில் கோமதிக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. அமமுக 10 லட்ச ரூபாய், திமுக 10 லட்ச ரூபாய், தமிழக காங்கிரஸ் 5 லட்ச ரூபாய், அதிமுக 15 லட்ச ரூபாய் என அரசியல் கட்சிகளும் கோமதி மாரிமுத்துவுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory