» சினிமா » செய்திகள்

9 தோற்றங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி!

வெள்ளி 3, மே 2019 5:42:24 PM (IST)ஜெயம் ரவி தனது 24வது படத்தில் வெவ்வேறு காலகட்டத்தில் ஒன்பது வெவ்வேறு தோற்றத்தில் நடிக்கிறார். 

நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் 24ஆவது படமாக வரவிருக்கும் கோமாளி படத்தின் டைட்டில் போஸ்டர் நேற்று (மே 2) மாலை வெளியானது. அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சம்யுக்தா ஹெக்டே மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

"படத்தில் ஒரு பெரிய காலகட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் இடம்பெறும், அதனால் அவர் வெவ்வேறு காலகட்டத்தில் ஒன்பது வெவ்வேறு தோற்றத்தில் காணப்படுவார்” என இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள் கபிலன் வைரமுத்து. இந்தப் படத்தைக் கோடை விடுமுறைக்குப் பின் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory