» சினிமா » செய்திகள்

பிக் பாஸ் 3: மீண்டும் தொகுத்து வழங்குகிறார் கமல்!

வியாழன் 9, மே 2019 4:18:40 PM (IST)

விஜய் டிவியில் வருகிற ஜூன் மாதம் முதல்  "பிக் பாஸ் சீசன் 3" நிகழ்ச்சி துவங்க உள்ளது. கமல்ஹாசனே இதனை தொகுத்து வழங்க உள்ளார். 

விஜய் டிவியில் கடந்த இரு வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றும் நடிகர் கமல்ஹாசன் முதல்முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள். முதல் வருட நிகழ்ச்சியில் ஆரவும் கடந்த வருட நிகழ்ச்சியில் ரித்விகாவும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் 3 விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்ச்சியையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். இதற்கான விளம்பரம் தொடர்பான படப்பிடிப்பு நேற்று சென்னை பூந்தமல்லியில் நடைபெற்றுள்ளது. அரசியல் கட்சி தொடங்கியுள்ளதால் இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் கலந்துகொள்ளமாட்டார் என்று கூறப்பட்ட நிலையில் கமல் மீண்டும் பிக் பாஸ் தொகுப்பாளராகப் பணியாற்றவுள்ளார். இந்த வருட நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள். ஜூன் முதல் நிகழ்ச்சி ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.


மக்கள் கருத்து

தம்பிமே 17, 2019 - 07:21:26 PM | Posted IP 108.1*****

முழுமையா புறக்கணியுங்கள் மக்களே - இவெனெல்லாம் இனி தலையெடுக்கவே கூடாது - நடை பிணத்திற்கும் கீழானவன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory