» சினிமா » செய்திகள்

சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!!

சனி 1, ஜூன் 2019 12:48:31 PM (IST)



கனடாவின் மோன்ட்ரல் நகரில் நடக்கும் ஃபென்டாசியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் படம் தேர்வாகி உள்ளது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் என நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் நடித்திருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பலதரப்பட்ட விமர்சனங்களை உருவாக்கியது. இதில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதியின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. 

மற்ற கதாபாத்திரங்களும் நடிப்பில் நல்ல ஸ்கோர் செய்திருந்தனர். மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்த இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்தி பதிப்பையும் தியாகராஜன் குமாரராஜாவே இயக்குகிறார். இந்தியில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் படத்துக்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. கனடாவில் உள்ள மோன்ட்ரல் நகரில் நடக்கும் ஃபென்டாசியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் படம் தேர்வாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிகில் படத்தின் 3வது பாடல் வெளியீடு

புதன் 18, செப்டம்பர் 2019 6:43:25 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory