» சினிமா » செய்திகள்

அனுமதி இன்றி இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை!!

புதன் 5, ஜூன் 2019 10:31:26 AM (IST)

இசைஞானி இளையராஜாவின் பாடல்களை அவர் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்திருந்த வழக்கில், அகி இசை நிறுவனம், எக்கோ மியூசிக் நிறுவனம் கிரி டிரேடர்ஸ் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் தான் இசையமைத்து வெளியிட்ட பாடல்களை தன்னுடைய அனுமதி பெறாமல் பயன்படுத்துவதாகவும் அந்தப் பாடலுக்கு தான் முழுமையான உரிமையை பெற்றுள்ளதாகவும் எனவே அந்த பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,   ஏற்கெனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தக்கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடத்திய நீதிபதி அனிதா சுமந்த்  ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையை நிரந்தரமாக்கி உத்தரவிட்டுள்ளார். அவரது பாடல்களை திரையரங்குகளைத் தவிர வேறு எங்கும் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளார்.

குறிப்பாக ஆன்லைன் உள்ளிட்ட ரேடியோ  நிறுவனங்கள், இசைப் போட்டிகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தக் கூடாது என்றும் பயன்படுத்த வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே அகி இசை நிறுவனம் இளையராஜாவின் பாடல்களை 10 வருடத்திற்கு பயன்படுத்த உரிமை உள்ளதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

தான் இசையமைத்த பாடல்களுக்கு ராயல்டி கேட்டு வருகிறார் இசைஞானி இளையராஜா. இந்நிலையில் தனது பாடல்களை தன் அனுமதி இன்றி வணிக ரீதியாக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இளையராஜாவின் பாடல்களை அவரின் அனுமதி இன்றி யாரும் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் அந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடைக்காலத் தடையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. இளையராஜாவுக்கு தான் அவரின் பாடல்களின் உரிமை உள்ளது. அதனால் அவர் இசையமைத்த பாடல்களை அவர் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து

கணைJun 11, 2019 - 03:29:00 PM | Posted IP 162.1*****

காசு வாங்காமல் சும்மாவா இசை அமைத்து குடுத்தான் இளையராசா

சாமிJun 5, 2019 - 06:55:55 PM | Posted IP 108.1*****

பொய்யான உண்மை - அது நீ நினைத்தாலும் நடக்காது - அவரது பாடல்கள் எல்லாமே தெய்வீகமானவை - சாகாவரம் பெற்றவை

உண்மைJun 5, 2019 - 01:31:00 PM | Posted IP 173.2*****

இவர் பாடல்களை எதிலும் ஒலி, ஒளி பரப்பக்கூடாது..அப்படியே அழிந்து போகட்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பிகில் படத்தின் 3வது பாடல் வெளியீடு

புதன் 18, செப்டம்பர் 2019 6:43:25 PM (IST)


Sponsored AdsTirunelveli Business Directory