» சினிமா » செய்திகள்

ஜூவாலா கட்டாவுடன் காதலா? விஷ்ணு விஷால் விளக்கம்

வியாழன் 6, ஜூன் 2019 12:49:50 PM (IST)

பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் எடுத்த செல்ஃபி குறித்து விஷ்ணு விஷால் விளக்கமளித்துள்ளார்.

நடிகர் ரஜினி காந்தின் நெருங்கிய நண்பரான நடராஜின் மகளான ரஜினியை கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் செய்த விஷ்ணு விஷால், கடந்த வருடம் மனைவியை விவாகரத்து செய்தார். பிறகு தன்னுடன் ராட்சசன் படத்தில் ஜோடியாக நடித்த அமலாபாலும் அவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் வதந்தி பரவியது. ஆனால் இதனை விஷ்ணு விஷால் மறுத்தார்.

இந்நிலையில் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் இருக்கும் செல்பி படங்களை விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் விஷ்ணு, " நீண்ட நாள்களாக எங்களுக்கு பழக்கம் உள்ளது. இருவருக்கும் பொதுவான நண்பர்கள் பலர் உள்ளனர். எனவே நண்பர்களுடன் சேர்ந்து நேரத்தை செலவிடுவோம். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும். இதற்கு மேல் இப்போது எதுவும் கூறமுடியாது. இருவருக்கும் நிறைய பொறுப்புகள் உள்ளன” என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory