» சினிமா » செய்திகள்

முதல்முறையாக சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறேன்: ஸ்ரீமன் பெருமிதம்!

வெள்ளி 7, ஜூன் 2019 4:12:27 PM (IST)"என் திரையுலக வாழ்வில் முதல்முறையாக தலைவர் - சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது" என ஸ்ரீமன் கூறியுள்ளார். 

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். இது ரஜினி நடிக்கும் 167-வது படம். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் அடுத்த வருடப் பொங்கல் தினத்தன்று படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடிக்கவுள்ளார் ரஜினி. வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் நடிக்கிறார். 

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் ஸ்ரீமன், பட அனுபவம் குறித்து ட்விட்டரில் கூறியதாவது: 19 வருடத்துக்குப் பிறகு இயக்குநர் முருகதாஸ் சாரின் படத்தில் நடித்துள்ளேன். முதல்முறையாக என் திரையுலக வாழ்வில் தலைவர் - சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சந்தோஷ் சிவன் அவர்களின் கேமராவில் பதிவாகியுள்ளேன். லைகாவுக்கு நன்றி என்று தனது உணர்வுகளை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பிகில் படத்தின் 3வது பாடல் வெளியீடு

புதன் 18, செப்டம்பர் 2019 6:43:25 PM (IST)


Sponsored AdsTirunelveli Business Directory