» சினிமா » செய்திகள்

லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ஹவுஸ் ஓனர்’!

வெள்ளி 7, ஜூன் 2019 5:20:41 PM (IST)சொல்வதெல்லாம் உண்மை புகழ் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஹவுஸ் ஓனர் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை வெள்ளத்தை மையப்படுத்திய லஷ்மி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. கிஷோர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள படம் ஹவுஸ் ஓனர். ஸ்ரீ ரஞ்சனி, லவ்லின் சந்திரசேகர் மற்றும் ஜூனியர் கிஷோர் ஆகியோரும் நடித்துள்ளனர். ஆரோகணம், நெருங்கிவா முத்தமிடாதே, அம்மணி போன்ற படங்களைத் தொடர்ந்து லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் நான்காவது படமிதுவாகும்.

2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த சென்னை வெள்ளத்தை மையப்படுத்தி இதன் திரைக்கதையை அமைத்துள்ளார் லஷ்மி ராமகிருஷ்ணன். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான கிஷோருக்கு சென்னையின் வெள்ள காலத்தில் பெய்யும் மழை அவரது கடந்த கால காதலை நினைவு படுத்துகிறது. வெள்ளம் வீட்டை சூழ விட்டிலிருந்து வெளியேற மறுக்கும் கிஷோரின் பிடிவாதமும், கடந்த கால காதலும் ரசிக்க வைக்கிறது. மன்கி கிரியேட்டிவ் லேப் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பிகில் படத்தின் 3வது பாடல் வெளியீடு

புதன் 18, செப்டம்பர் 2019 6:43:25 PM (IST)


Sponsored AdsTirunelveli Business Directory