» சினிமா » செய்திகள்

பழம்பெரும் நடிகை - இயக்குநர் விஜய நிர்மலா மறைவு: கின்னஸ் சாதனை படைத்தவர்!

வியாழன் 27, ஜூன் 2019 5:24:51 PM (IST)

பழம்பெரும் நடிகையும், பெண் இயக்குநருமான விஜய நிர்மலா உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

மச்ச ரேகை எனும் தமிழ் படத்தில் குழந்தை கதாப்பாத்திரமாக அறிமுகமாகி, எங்க வீட்டு பெண், பணமா பாசமா, என் அண்னன், ஞான ஒளி போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 73 வயதான விஜய நிர்மலா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 

ஆந்திர திரைப்படத்துறையில் நடிகை, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகப் பணிபுரிந்தவர் விஜய நிர்மலா. இவர் தெலுங்கு மொழியில் 44 படங்களை இயக்கியுள்ளார். அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்பதால், கடந்த 2002-ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்தார். விஜய நிர்மலா மறைவுக்கு குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory