» சினிமா » செய்திகள்

மருத்துவரை மணந்தார் இயக்குநர் ஏஎல் விஜய்: பிரபலங்கள் வாழ்த்து!!

வெள்ளி 12, ஜூலை 2019 3:39:41 PM (IST)

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ஏஎல் விஜய், ஐஸ்வர்யா என்கிற மருத்துவரைத் திருமணம் செய்துள்ளார்.

இயக்குநர் ப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் ஏ.எல். விஜய். இவர் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் இளைய மகன். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ’கீரிடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக இவர் கால்பதித்தார். அதை தொடர்ந்து பொய் சொல்ல போறோம், மதராசப்பட்டினம், தெய்வதிருமகள், சைவம் போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான அடையாளத்தை பதிவு செய்தார். இவர் இயக்கிய சில படங்கள் தமிழ் சினிமாவில் எவர்கிரீன் படங்களாக அமைந்தன.  இந்த வருடம் வாட்ச்மேன், தேவி 2 என விஜய் இயக்கிய இரு படங்கள் வெளியாகியுள்ளன. அடுத்ததாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை விஜய் இயக்கவுள்ளார். ஜெயலலிதா வேடத்தில் கங்கனா நடிக்கவுள்ளார். 

தெய்வதிருமகள் படத்தின் போது அமலா பாலுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் காதலித்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகின.  அதை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில், ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தலைவா படத்தில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தலைவா படம் வெளியான சில மாதங்களில் ஏ.எல். விஜய் மற்றும் அமலா பால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  மூன்று வருடங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2017ம் ஆண்டில் அவர்கள் இருவரும் விவகாரத்து பெற்றனர். இந்நிலையில், இவருக்கு மறுமணம் செய்துவைக்க அவருடைய பெற்றோர்கள் மணப்பெண் தேடி வந்தனர். 

பெற்றோர்களின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு 2வது திருமணத்திற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். அதன்படி சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு - அனிதா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா. எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற இவர், பொதுநல மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது இயக்குநர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் என்பதால் நெருங்கிய உறவினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.  மணமக்கள் மற்றும் விஜய்யின் பெற்றோர் ஆகியோர் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுமண தம்பதிக்கு திரையுலக பிரபலங்கள், ரசிக பெருமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்

திங்கள் 9, டிசம்பர் 2019 5:47:26 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory