» சினிமா » செய்திகள்

அமலா பால் படத்துக்காக பக்திப் பாடல் பாடிய பி.சுசீலா

வெள்ளி 12, ஜூலை 2019 5:45:25 PM (IST)

அமலா பால் நடித்துள்ள ஆடை படத்துக்காக, 70 வருடங்களுக்கு முன்பு பாடிய பக்திப் பாடல் ஒன்றை பி.சுசீலா பாடியுள்ளார்.

மேயாத மான் படத்தைத் தொடர்ந்து ரத்னகுமார் இயக்கியுள்ள படம் ஆடை. ஹீரோயினை மையப்படுத்திய இந்தக் கதையில், பிரதான பாத்திரத்தில் அமலா பால் நடித்துள்ளார். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. படம் நேரடி ஒலிப்பதிவு என்பதால், இந்தப் படத்தில் டப்பிங் பணிகள் கிடையாது. இதனால், இறுதிக்கட்டப் பணிகள் விரைவாக முடிவடைந்தன. இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள், ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

பெண் ஒருவர் ஆடையில்லாமல், ஒரு இடத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்ற பின்னணியில் இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. விஜே ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.வருகிற 19-ம் தேதி படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆடை படத்தில் பக்திப் பாடல் ஒன்றை பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலா பாடியிருப்பதாகத் தெரிவித்துள்ளார் ரத்னகுமார். 70 வருடங்களுக்கு முன்பு பி.சுசீலா பாடிய ஒரு பக்திப் பாடலை, மறுபடியும் ரெக்கார்டிங் செய்து பயன்படுத்தியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory