» சினிமா » செய்திகள்
சந்தானம் நடிக்கும் ஏ1 ஜூலை 26-ம் தேதி ரிலீஸ்
சனி 13, ஜூலை 2019 3:23:42 PM (IST)

சந்தானம் நடித்துள்ள ஏ 1 படம் ஜூலை 26-ம் தேதி வெளியாகிறது.
சந்தானம் தில்லுக்கு துட்டு 2. படத்தைத் தொடர்ந்து ஏ 1 என்ற படத்தில் நடித்துள்ளார். நாளைய இயக்குநர் இரண்டாவது சீஸனின் வெற்றியாளரான ஜான்சன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ராஜேந்திரன், சுவாமிநாதன், மனோகர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். லியோ ஜான் பால் எடிட் செய்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஏ 1 படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. ரூ. 4.60 கோடிக்கு ஒளிபரப்பு உரிமை விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படம் ஜூலை 26-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தானம் இதை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். ஏ 1 படத்தைத் தொடர்ந்து டகால்டி என்ற படத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து யோகி பாபு நடிக்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினி பேசிய அந்த டயலாக் மூலம் சினிமாவிற்கு வந்த பலனை அடைந்தேன்: பா.ரஞ்சித்
வெள்ளி 13, டிசம்பர் 2019 5:16:45 PM (IST)

மணிரத்னம் இயக்கும் பொன்னியன் செல்வன் படப்பிடிப்பு: தாய்லாந்தில் தொடங்கியது
வியாழன் 12, டிசம்பர் 2019 4:23:37 PM (IST)

ரஜினி - இயக்குநர் சிவா படம் பூஜையுடன் தொடங்கியது!
புதன் 11, டிசம்பர் 2019 12:04:46 PM (IST)

நகைச்சுவை நடிகர் சதீஷ் திருமணம்: திரையுலகினர் வாழ்த்து
புதன் 11, டிசம்பர் 2019 12:01:30 PM (IST)

ரஜினி படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ்!!
செவ்வாய் 10, டிசம்பர் 2019 12:03:19 PM (IST)

பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்
திங்கள் 9, டிசம்பர் 2019 5:47:26 PM (IST)
