» சினிமா » செய்திகள்

விக்ரம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை!!

சனி 13, ஜூலை 2019 5:47:56 PM (IST)

விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

டிமான்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு படங்களிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் அஜய் ஞானமுத்து. இவர் இயக்கும் 3-வது படம் விக்ரமின் 58-வது படமாக உருவாகிறது. இதில் இசை அமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் இணைந்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. 

2020-ல் கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக இப்படம் வெளிவர இருக்கிறது. மற்ற நட்சத்திரங்கள் யாரெல்லாம் இப்படத்தில் இருக்கிறார்கள் என்ற தகவலும் டெக்னிஷியன்ஸ் டீம் யார் யார் என்ற தகவலும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படம் தயாராக இருப்பதால் இந்திய சினிமாவில் இது மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்

திங்கள் 9, டிசம்பர் 2019 5:47:26 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory