» சினிமா » செய்திகள்

தலைவன் இருக்கின்றான்: சினிமாவுக்கு திரும்பும் கமல்

செவ்வாய் 16, ஜூலை 2019 4:29:43 PM (IST)



அரசியலுக்கு வந்தபின் இனித் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என அறிவித்த கமல் தனது அடுத்தப் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியபின் கமல் நடிப்பில் விஸ்வரூபம் 2 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. ஆனால் அதற்கு முன்பாகவே, ஏற்கெனவே ஒத்துக்கொண்ட படங்களைத் தவிர இனி வேறு எந்தப் படங்களிலும் நடிக்கப்போவதில்லை என கமல் கூறியிருந்தார். எனவே சபாஷ் நாயுடு படம் பாதியிலேயே நின்ற நிலையில், அந்தப் படமும் இந்தியன் 2 திரைப்படமும் மட்டும் அவர் நடிப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கின. ஆனால் சில நாள்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் லைகா நிறுவனம் தயாரிப்பிலிருந்து விலகுவதாக செய்திகள் வெளியாகின. தற்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை தவிர்த்து கமல் நடிப்பில் தலைவன் இருக்கின்றான் என்ற படம் உருவாகவுள்ளதாக ஏற்கெனவே பேசப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் பணிகளை கமல் முன்னெடுத்துவருகிறார்.

அதன் ஒருகட்டமாக நேற்று இசையமைப்பாளர் ஏ,ஆர்.ரஹ்மானைச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து இருவரும் தங்கள் டிவிட்டர் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். கமல் அரசியலில் இறங்குவதற்கு முன்பாகவே இந்த தலைப்பு வைக்கப்பட்டிருப்பினும் நிச்சயம் இப்படம் அவரது அரசியலை பேசும்விதமாகவே உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியையே தனது கட்சியை, தனது அரசியலை கொண்டு செல்லும் ஊடகமாக கமல் பயன்படுத்திவருகிறார் என்று சமூகவலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இந்தப் படமும் அத்தகைய விமர்சனத்தை சந்திக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்

திங்கள் 9, டிசம்பர் 2019 5:47:26 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory