» சினிமா » செய்திகள்

இயக்குநர் சங்கத் தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு

திங்கள் 22, ஜூலை 2019 12:47:04 PM (IST)

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவராக ஆ.கே.செல்வமணி தேர்வு செய்யப்பட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்த் திரைப்பட  இயக்குநர் சங்கத் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். பதவியில் இருந்த விக்ரமன் தலைமையிலான, நிர்வாகத்தின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய நிர்வாகத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல்  சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி, வித்யாசாகர் இருவரும் போட்டியிட்டனர். தலைவர், இரண்டு துணைத் தலைவர், நான்கு இணைச் செயலாளர்கள் மற்றும் 12 செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு இந்தத் தேர்தல் நடைபெற்றது. 

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில்நாதன் மேற்பார்வையில் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 4 மணிக்கு தேர்தல் முடிவடைந்த நிலையில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான 1503 வாக்குகளில் 1386 வாக்குகள் பெற்று ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வித்யாசாகர் 100 வாக்குகள் மட்டுமே பெற்றார். மேலும், பொதுச் செயலாளர் பதவிக்கு ஆர்.வி. உதயகுமாரும், பொருளாளர் பதவிக்கு இயக்குநர் பேரரசுவும் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்

திங்கள் 9, டிசம்பர் 2019 5:47:26 PM (IST)


Sponsored AdsTirunelveli Business Directory