» சினிமா » செய்திகள்
இந்தியன் 2 படப்பிடிப்பு ஆக.12 முதல் மீண்டும் தொடக்கம்
புதன் 7, ஆகஸ்ட் 2019 3:32:17 PM (IST)
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு வரும் 12-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 2021-ல் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

லைகா நிறுவனம் சுபாஷ்கரன் சென்னை வந்த போது, இயக்குநர் ஷங்கர் அவரைச் சந்தித்து பேசினார் . இதில் சுமுக முடிவு எட்டப்பட்டது. இதில் 200 கோடி பொருட்செலவு என்பது உறுதிச் செய்யப்பட்டது. இதனால் மீண்டும் இந்தியன் 2 பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் கமலுடன் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்கவுள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார். ஆனால் படத்தின் தாமதத்தால் தற்போது அதிலிருந்து விலகிவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.
தற்போது வரும் 12-ம் தேதிமுதல் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைக்கு ஏப்ரல் 2021-ல் வெளியிடலாம் என முடிவு செய்துள்ளனர்.இந்தியன் 2 படத்துக்காக அனைத்து நடிகர்களிடமும் பெருவாரியான தேதிகளை வாங்கியுள்ளது படக்குழு. அதைப் போல் இந்தப் படத்தில் கவனம் செலுத்திக் கொண்டே, தனது தலைவன் இருக்கின்றான் படத்திலும் நடித்து, இயக்க முடிவு செய்துள்ளார் கமல்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினி - இயக்குநர் சிவா படம் பூஜையுடன் தொடங்கியது!
புதன் 11, டிசம்பர் 2019 12:04:46 PM (IST)

நகைச்சுவை நடிகர் சதீஷ் திருமணம்: திரையுலகினர் வாழ்த்து
புதன் 11, டிசம்பர் 2019 12:01:30 PM (IST)

ரஜினி படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ்!!
செவ்வாய் 10, டிசம்பர் 2019 12:03:19 PM (IST)

பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்
திங்கள் 9, டிசம்பர் 2019 5:47:26 PM (IST)

ஜெ. வாழ்க்கை வரலாறு இணையதள தொடர்: கவுதம் மேனன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 9, டிசம்பர் 2019 5:37:26 PM (IST)

தர்பார் இசை வெளியீட்டு விழா: சீமானை மறைமுகமாகச் சாடிய லாரன்ஸ்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 4:48:13 PM (IST)
