» சினிமா » செய்திகள்

மல்டி ஸ்டார் படங்களில் நடிக்க தயார் : ஆர்யா பேட்டி

செவ்வாய் 3, செப்டம்பர் 2019 12:18:03 PM (IST)

காப்பான் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளேன். தொடர்ந்து மல்டி ஸ்டார் படங்களில் நடிக்க தயார் என ஆர்யா கூறியுள்ளார்.

ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் ஆகியோர் நடித்துள்ள புதிய படம் மகாமுனி. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். சாந்தகுமார் இயக்கி உள்ளார். படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ஆர்யா கூறியதாவது: "மகாமுனி படத்தில் கார் டிரைவர் மற்றும் கொலையாளி என்று இரு வேடங்களில் நடித்துள்ளேன். எனக்கு சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் உண்டு. சைக்கிள் பந்தயம் மீதான ஆர்வம்தான் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. சைக்கிள் பந்தயங்களில் ஈடுபடுபவர்கள் உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாகவும் வலுவானவர்களாக இருப்பார்கள்.

மகாமுனி படத்துக்கு அதுமாதிரி ஒரு நடிகர் தேவை என்பதால் இயக்குனர் என்னை தேர்வு செய்தார். அழுத்தமான கதையம்சத்தில் இந்த படம் தயாராகி உள்ளது. இதில் ஒரு சிறுவனுக்கு தந்தையாக நடித்து இருக்கிறேன். எனது திருமணத்துக்கு பிறகு இந்த படம் திரைக்கு வருகிறது. திருமணமான பிறகு நான் மாறவில்லை. சக நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்து உள்ளனர். அடுத்த மாதம் நான் நடித்துள்ள மகாமுனி, காப்பான் ஆகிய 2 படங்கள் திரைக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. காப்பான் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளேன். தொடர்ந்து இரண்டு, மூன்று கதாநாயகர்கள் படங்களில் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன்.” இவ்வாறு ஆர்யா கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory