» சினிமா » செய்திகள்

சின்னத்திரை ராமருக்கு ஜோடியான சஞ்சய் கல்ராணி

சனி 7, செப்டம்பர் 2019 3:50:45 PM (IST)



சின்னத்திரை பிரபலமான ராமர், தற்போது கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் சஞ்சய் கல்ராணி நாயகியாக நடிக்கிறார்.

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மிகவும் பிரபலமானவர் ராமர். இவர் தற்போது புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக சஞ்சய் கல்ராணி நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். கற்பனை, காமெடி, திரில்லர் கலந்து உருவாகும் இந்த புதிய படத்தை ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மணி ராம் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். 

ஜபீஸ் கே கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைக்கிறார். மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆல்வின் காளிச்சரண் இப்படத்தின் துவக்கி வைத்துள்ளார். இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழிட்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory