» சினிமா » செய்திகள்

பொன்னியின் செல்வன் டிசம்பரில் தொடங்கும்: கலை இயக்குநராக தோட்டா தரணி ஒப்பந்தம்

திங்கள் 9, செப்டம்பர் 2019 5:31:06 PM (IST)



மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல கலை இயக்குனர் தோட்டா தரணி பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், அமலாபால், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தில் நடிப்பதை விக்ரமும், ஐஸ்வர்யா ராயும் ஒப்புக் கொண்டுள்ளனர். திரிஷாவையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.  யார் எல்லாம் நடிக்கிறார்கள் உள்ளிட்ட எந்த ஒரு விபரத்தையும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. 

இந்நிலையில், இந்த படத்துக்காக 12 பாடல்களை எழுத உள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். அந்தக் காலத்தில் உள்ள வார்த்தைகளை இந்தக் காலத்தில் உள்ள மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுத உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு தொடங்கப்படும் நாள் அன்று தான் படக்குழுவினரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் இப்படத்தில் பிரபல கலை இயக்குனர் தோட்டா தரணி பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே மணிரத்னத்துடன் நாயகன், தளபதி போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory