» சினிமா » செய்திகள்

பிரபல திரைப்பட எடிட்டரின் மகன் கதாநாயகனாக அறிமுகம்

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 11:10:22 AM (IST)
தமிழ் திரையுலகின் பிரபல  திரைப்பட எடிட்டரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷின் மகன் ரோஷன், உற்றான் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். 

இத்திய மொழிகள் மட்டுமின்றி  மலேசியப் படங்கள், இலங்கைப் படங்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ். இவர் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராக விளங்கி வருகிறார். இவரது மகன் ரோஷன் (23 )  உற்றான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகின்றார். விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பு படித்த ரோஷன், முதலில் நடித்து இயக்கிய குறும்படம் புத்தப் போர் .தமிழ் ஈழப் போராளி குட்டி மணியின் கடைசி நிமிடங்களை மையமாக வைத்து எடுத்த புத்தப் போர் குறும்படத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, வெளியிட அதை பழ நெடுமாறன் பெற்றுக் கொண்டு வாழ்த்தினார்.

இயக்குனர்கள் கே.பாக்யராஜ்,  ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர்கள் டி.சிவா, நடிகர் கே.ராஜன், போஃப்டா தனஞ்செயன், உட்பட ஏராளமான பிரபலங்கள் குறும்படத்தைப் பார்த்து வாழ்த்திப் பேசினர். அதைத் தொடர்ந்து உற்றான் படத்தின் மூலம் கதாநாயகனாக  ரோஷன் அறிமுகம் ஆகின்றார். இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், எழுதி தயாரித்து இயக்கியுள்ளவர் ராஜா கஜினி. நீர்ப்பறவை படத்திற்கு இசையமைத்த ரகுநந்தன் உற்றான் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

உற்றான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் 23 ம் தேதி மாலை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற உள்ளது.
இதில் கலையுலகப் பிரபலங்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.


மக்கள் கருத்து

USSR நடராசன்Sep 18, 2019 - 02:43:37 AM | Posted IP 108.1*****

நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் ரோஷன்! USSR நடராசன் சிகாகோ அமெரிக்காவிலிருந்து

Babu Reporter uthangaraiSep 17, 2019 - 06:43:44 PM | Posted IP 173.2*****

தனது பொது சேவையாழ் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களின் மனதில் வாழும் TUJ DSR ன் பேரன்னல்லவா நீ உமக்கு தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க சொல்லியா கொடுக்கவேன்டும் நானும் குடும்த்தோடு திரைஎதிரே சந்திக்க காத்திருக்கும் ரசிகர்களில் ஒருவன்

என்.இரவிச்சந்திரன் ,செய்தியாளர்,திருவண்ணாமலைSep 17, 2019 - 02:39:18 PM | Posted IP 162.1*****

புலிக்கு பிறந்தது பூனையாகுமா தாய் ஒரு அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதற்கு ஏற்றார் போல் ரோஷன் நடித்துள்ள உற்றான் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory