» சினிமா » செய்திகள்

ரஜினி பட தலைப்பில் நயன்தாரா நடிக்கும் புதிய படம்

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 3:59:50 PM (IST)



விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்க உள்ள படத்திற்கு நெற்றிக் கண் என பெயரிடப்பட்டுள்ளது.

நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ,  இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் சொந்தமாக ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி உள்ளார். இந்த நிறுவனம் மூலம் அவர் தயாரிக்கும் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். திகில் படமாக தயாராகிறது. இந்த படத்தை மிலிந்த்ராவ் இயக்குகிறார். இவர் சித்தார்த், ஆண்ட்ரியா ஆகியோரை வைத்து அவள் என்ற பேய் படத்தை டைரக்டு செய்தவர். நயன்தாரா படத்துக்கு நெற்றிக்கண் என்று பெயர் வைத்து இருப்பதாக விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் அறிவித்து உள்ளார்.

நெற்றிக்கண், ரஜினிகாந்த் படத்தின் தலைப்பு ஆகும். தந்தை, மகன் என்று 2 வேடங்களில் அவர் நடித்து இருந்தார். விசுவின் கதையில் கே.பாலசந்தர் திரைக்கதையில் எஸ்.பி. முத்துராமன் இயக்கிய நெற்றிக்கண் படம் 1981-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. லட்சுமி, சரிதா, மேனகா, சரத்பாபு ஆகியோரும் நடித்து இருந்தனர். நெற்றிக்கண் பெயரை வைத்து இருப்பதால் நயன்தாரா படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த தலைப்பை பயன்படுத்த அனுமதி அளித்ததற்காக ரஜினிகாந்துக்கும், கவிதாலயா நிறுவனத்துக்கும் விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory