» சினிமா » செய்திகள்

பிகில் படத்தின் 3வது பாடல் வெளியீடு

புதன் 18, செப்டம்பர் 2019 6:43:25 PM (IST)விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் 3-வது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், தீபாவளிக்கு இந்த படம் வெளியாகிறது.

ரஹ்மான் இசையமைப்பில் சிங்கப்பெண்ணே, வெறித்தனம் என இரு பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. பிகில் படத்தின் பாடல்கள் நாளை வெளியிடப்படுகின்றன.இந்நிலையில் பிகில் படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ரஹ்மான் இசையமைப்பில் உருவான உனக்காக வாழ நினைக்கிறேன் என்கிற அந்தப் பாடலை ஸ்ரீகாந்த் ஹரிஹரன், மதுரா தரா தல்லூரி பாடியுள்ளார்கள். விவேக் பாடலை எழுதியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory