» சினிமா » செய்திகள்

அத்திவரதருக்குப் பிறகு விஜய்க்குதான் அதிகக் கூட்டம்: பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் விவேக் பேச்சு!

வெள்ளி 20, செப்டம்பர் 2019 3:50:12 PM (IST)

அத்திவரதருக்குப் பிறகு அதிகக் கூட்டம் கூடியது பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவுக்குத்தான் என நடிகர் விவேக் பேசினார்.

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். 

இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. தீபாவளிக்கு வெளியாகிறது. ரஹ்மான் இசையமைப்பில் பிகில் படத்தின் பாடல்கள் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டன. பிகில் பாடல் வெளியீட்டு விழா, சன் டிவியில் வரும் ஞாயிறு அன்று (செப். 22) மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. 

பிகில் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் விவேக் பேசியதாவது: இசை வெளியீட்டு விழாவுக்கு வருவதற்கு எனக்கு 3 மணி நேரம் ஆனது. அத்திவரதருக்குப் பிறகு அதிக மக்கள் கூடிய இடமாக இந்த இடத்தைப் பார்க்கிறேன். இப்படத்தில் இடம்பெறும் கால்பந்து ஆட்டங்கள் தொடர்பான காட்சிகள் ஹாலிவுட் படத்துக்கு இணையாக இருக்கும். அட்லியின் உழைப்பு எனக்குப் பிடிக்கும். சூரியனைப் போல பிரகாசமாக சுடர் விட்டு எரியவேண்டும் என்றால் சூரியன் போல இடைவிடாமல் எரியணும் (உழைக்கவேண்டும்). அதனால் தான் அட்லி கருப்பாக உள்ளார். வியாழக்கிழமையன்று சாய்பாபா பெயர் கொண்ட கல்லூரியில் பிகில் இசை வெளியீட்டு விழா நடைபெறுவது மேலும் ஒரு சிறப்பு என்று பேசினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory