» சினிமா » செய்திகள்

ஜெயலலிதாவாக மாறும் கங்கனா: வைரலாகும் மேக்கப் டெஸ்ட் புகைப்படம்!!

புதன் 25, செப்டம்பர் 2019 11:40:37 AM (IST)மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதற்காக கங்கனாவின் மேக்கப் டெஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெயலலிதா வாழ்க்கை விஜய் இயக்கத்தில் தலைவி என்ற பெயரில் படமாகிறது. ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. கங்கனா ரணாவத் இதில் நடிக்க ரூ.20 கோடி சம்பளம் கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த வருடம் இறுதியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நான்கு காலகட்டங்களில் நான்கு விதமான தோற்றங்களில் வருகிறார் என்றும் அவரது தோற்றங்களை ஹங்கர் கேம்ஸ், கேப்டன் மார்வல், பிளேட் ரன்னர் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய ஒப்பனை கலைஞர் ஜேசன் காலின்ஸ் வடிவமைக்கிறார் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். 

இந்நிலையில் கங்கனா ரணாவத்தை ஜெயலலிதாவாக மாற்றுவதற்கான மேக்கப் டெஸ்ட் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. இதற்காக கங்கனா உள்ளிட்ட படக்குழுவினர் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளனர். அங்கு கங்கனாவை ஜெயலலிதா தோற்றத்துக்கு மாற்ற மேக்கப் போட்டனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து கங்கனாவின் சகோதரி ரங்கோலி கூறும்போது, "இப்படி கஷ்டப்பட்டுத்தான் உருவத்தை மாற்றுவதற்காக மேக்கப் போடுகிறார். ஒரு நடிகைக்கு இது எளிதான காரியம் இல்லை. அவரை பார்க்க எங்களுக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் கங்கனா அமைதியாகவே இருந்தார்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory