» சினிமா » செய்திகள்
பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மறைவு
செவ்வாய் 8, அக்டோபர் 2019 3:59:37 PM (IST)

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்.
கோலிவுட்டில் புரடொக்ஷன் மானேஜராக பல திரைப்படங்களில் பணிபுரிந்தவர் சிறு சிறு வேடங்களில் சில படங்களில் நடித்தார். தவசி, நான் கடவுள், எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த இவர் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னைக்கு வந்தவர். தவசி படத்தில் வடிவேலுவுடன் இவர் தோன்றும் அட்ரெஸ் காமெடியை ரசிகர்கள் யாரும் அத்தனை எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.
குமுளியில் ஒரு படப்பிடிப்பின் போது 4.30 மணிக்கு திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிர் இழந்தார். கிருஷ்ணமூர்த்திக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது மறைவுக்குத் திரைத்துறையினர் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினி படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ்!!
செவ்வாய் 10, டிசம்பர் 2019 12:03:19 PM (IST)

பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்
திங்கள் 9, டிசம்பர் 2019 5:47:26 PM (IST)

ஜெ. வாழ்க்கை வரலாறு இணையதள தொடர்: கவுதம் மேனன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 9, டிசம்பர் 2019 5:37:26 PM (IST)

தர்பார் இசை வெளியீட்டு விழா: சீமானை மறைமுகமாகச் சாடிய லாரன்ஸ்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 4:48:13 PM (IST)

விஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்: கோவையில் திடீர் நிச்சயதார்த்தம்!
சனி 7, டிசம்பர் 2019 4:03:17 PM (IST)

டிச.7ம் தேதி தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா: லைகா நிறுவனம் அறிவிப்பு
வியாழன் 5, டிசம்பர் 2019 10:24:39 AM (IST)
