» சினிமா » செய்திகள்

மணிரத்னம் மீதான தேசதுரோக வழக்கினை திரும்பப்பெற வேண்டும் : பாரதிராஜா

செவ்வாய் 8, அக்டோபர் 2019 5:24:14 PM (IST)

மணிரத்னம் உள்ளிட்ட 49பேர் மீதான தேசதுரோக வழக்கினை திரும்பப்பெற வேண்டும் என்று பாரதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் குழு வன்முறையால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்தக் கொடுமையைக் கண்டித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு இயக்குநர் மணிரத்னம், அடூர் கோபால கிருஷ்ணன், அனுராக் காஷ்யப், அபர்ணா சென், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் கடிதம் எழுதினர். இதற்காக இவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில் இயக்குநர் பாரதி ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலே ஒருவரை தேசவிரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்கமுடியாது என்று தங்களுடைய கவலையை தானே குறிப்பிட்டிருந்தார்கள். இதற்காக தேசவிரோத வழக்குப் பதிவு செய்வதை ஏற்கமுடியாது. அரசு சார்பில் பேசியவர்கள், மத்திய அரசுக்கு இதில் தொடர்பில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்  என்று குறிப்பிட்டுள்ளார்.

கலைஞர்கள் தங்கள் கருத்துக்களை திரைப்படங்கள் மூலமாகவே பதிவு செய்யவேண்டும். பொதுவெளியில் பேசக்கூடாது என்று அச்சுறுத்துவதும் பொய் வழக்குகளின் பேரில் மாற்றுக் கருத்துடையவர்களை மவுனமாக்க முயல்வதும் ஏற்கத்தக்கதல்ல என்று பாரதிராஜா கூறியுள்ளார். மத்திய அரசு உடனடியாக 49 பேருக்கு எதிரான தேசதுரோக வழக்கினை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிராஜா வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory