» சினிமா » செய்திகள்

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படம் : சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வெள்ளி 11, அக்டோபர் 2019 3:59:02 PM (IST)

தர்பார் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 168-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து ரஜினியின் 168-வது படத்தை சிவா இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எந்திரன், பேட்ட போன்ற படங்களில் ரஜினி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

90களில் ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்த எஜமான், முத்து, படையப்பா ஆகிய படங்கள் கிராமப்புற பின்னணியில் அமைந்திருந்தன. வீரம், விஸ்வாசம் என கிராமப்புற பின்னணியில் மாஸ் ஹீரோக்களுக்கான கதையமைத்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் சிவா, ரஜினிக்கும் அப்படி ஒரு திரைக்கதையை எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தைத் தயாரிக்கவுள்ளது குறித்து சன் பிக்சர்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில், "எந்திரன் மற்றும் பேட்ட படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக ரஜினி - சன் பிக்சர்ஸ் கூட்டணி இணைகிறது. ரஜினியின் 168-வது படமாக உருவாகும் இந்தப் படத்தை சிவா இயக்கவுள்ளார்" எனத் தெரிவித்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியின் 167-வது படமாக உருவாகியுள்ள தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory