» சினிமா » செய்திகள்

தீபாவளிக்கு முன்பே ரிலீசாகும் விஜய், கார்த்தி படங்கள்!!

சனி 19, அக்டோபர் 2019 4:32:11 PM (IST)விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய படங்கள்  தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பாக வருகிற 25-ஆம் தேதி வெளியாகிறது.

விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்து இருந்தனர். ஆனால் தீபாவளி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதற்கு முன்பாக வெள்ளிக்கிழமை வெளியிடுமாறு வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் வற்புறுத்தினர். இரண்டு நாட்கள் முன்பே வெளியானால் அதிக வசூல் பார்க்க முடியும் என்றும் தெரிவித்தனர். அதனை ஏற்று பிகில், கைதி படங்கள் தீபாவளிக்கு முன்பாக வருகிற 25-ந் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது விஜய், கார்த்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தியேட்டர்களில் கட் அவுட் வைக்காமல் கொடி தோரணங்கள் கட்டி அமர்க்களப்படுத்த தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் கோர்ட்டில் நடைபெறும் பிகில் கதை சர்ச்சை வழக்கின் தீர்ப்பு திங்கட்கிழமை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிகில் படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. இதில் விஜய் தந்தை, மகன் என்று 2 வேடங்களில் நடித்துள்ளார். மகன் விஜய் கால்பந்து பயிற்சியாளராக வருகிறார். நயன்தாரா, விவேக், கதிர், யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. யூடியூப்பிலும் அதிகம் பேர் பார்த்து சாதனை நிகழ்த்தி உள்ளது. கைதி படத்தில் கார்த்தி ஆயுள் தண்டனை கைதியாக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory