» சினிமா » செய்திகள்

பொங்கல் ரேஸில் ரஜினியுடன் மோதும் கார்த்தி!!

சனி 2, நவம்பர் 2019 12:11:08 PM (IST)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் தர்பார் படத்துடன் கார்த்தியின் சுல்தான் படமும் ரிலீசாக உள்ளது.

தீபாவளிக்கு விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி படங்கள் திரைக்கு வந்து இரண்டுமே நல்ல வசூல் பார்த்தன. இந்த படங்களை பிறமொழிகளில் ரீமேக் செய்யவும் ஆர்வம் காட்டுகின்றனர். அடுத்து டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையில் சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். சூப்பர் ஹீரோ கதையம்சத்தில் இந்த படம் தயாராகி உள்ளது.

அதே நாளில் பாபநாசம் படத்தை எடுத்து பிரபலமான ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படத்தையும் திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. இதில் சத்யராஜ், ஜோதிகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதுபோல் பொங்கல் பண்டிகையில் ரஜினிகாந்தின் தர்பார், கார்த்தியின் சுல்தான் ஆகிய 2 படங்களும் மோத இருப்பதாக கூறப்படுகிறது.

தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ரஜினி தோற்றம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்தியின் சுல்தான் படத்தை சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடித்த ரெமோ படத்தை எடுத்து பிரபலமான பாக்யராஜ் கண்ணன் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து படப்பிடிப்பில் புகுந்து சிலர் போராட்டம் நடத்தினர். இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory