» சினிமா » செய்திகள்

டெல்லியில் காற்றுமாசு: விஜய் பட ஷூட்டிங் பாதிப்பு

புதன் 6, நவம்பர் 2019 4:57:38 PM (IST)

டெல்லியில் காற்று மாசு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமின்றி விஜய் பட ஷூட்டிங்கும் பாதிக்கப்பட்டுள்ளது. 

கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் நடிக்கும் 64வது படத்தை இயக்குகிறார். விஜய் நடித்த பிகில் படம் தீபாவளிக்கு 2 தினங் களுக்கு முன்பு கடந்த மாதம் ரிலீஸ் ஆனது. பிகில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே விஜய் 64 படத்தின் படப்பிடிப்பு ெதாடங்கப்பட்டது. சில நாட்களில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடக்கிறது. கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்று மாசு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பிட்ட அளவை விட காற்று மாசு அதிகமாக இருப்பதால் அதைக்கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த காற்று மாசு விஜய் 64வது படத்தின் படப்பிடிப்பையும் பாதித்திருக்கிறது. வேகமாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது மந்தகதியில் நடப்பதாக தகவல் வருகிறது. மாசு குறைந்தவுடன்  படப்பிடிப்பு வேலைகளை மிக வேகமாக நடத்தி முடிக்க இயக்குனர் லோகேஷ் திட்டமிட்டிருக்கிறார்.  இப்படம்  வரும் 2020-ஆம் ஆண்டு கோடைகால கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory