» சினிமா » செய்திகள்

மணிரத்னம் இயக்கும் பொன்னியன் செல்வன் படப்பிடிப்பு: தாய்லாந்தில் தொடங்கியது

வியாழன் 12, டிசம்பர் 2019 4:23:37 PM (IST)

மணிரத்னத்தின் நீண்டகால கனவுப் படமான பொன்னியன் செல்வன் படப்பிடிப்பு தாய்லாந்தின் காடுகளில் இன்று தொடங்கியது.  

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற உன்னதமான சரித்தர நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் பொன்னியன் செல்வன் திரைப்படத்தை மிகப் பெரிய பட்ஜெட்டில் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது, மணிரத்னத்தின் நீண்டகால கனவுப் படமான இந்தப் படம் இரண்டு பாகமாக எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  முதன்மை படக்குழுவினர் சிலர் மற்றும் நடிகர்கள் அண்மையில் அங்கு பயணம் செய்துள்ளனர். 

தற்போதைய படப்பிடிப்பில், கார்த்தி மற்றும் ஜெயம் ரவி இருவரும் பங்கேற்கிறார்கள், சில தினங்களில் விக்ரம் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். தோட்டா தரணி கலை இயக்கமும்,  ரவி வர்மன் ஒளிப்பதிவையும் செய்ய, கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், ஜெயரம், அஸ்வின் ககமனு, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் பொன்னியன் செல்வன் படத்தில் நடிக்கிறார்கள்.


மக்கள் கருத்து

saamiDec 15, 2019 - 10:07:30 AM | Posted IP 162.1*****

nalla idam?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory