» சினிமா » செய்திகள்

மணிரத்னம் படத்தில் இருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்

சனி 14, டிசம்பர் 2019 11:41:19 AM (IST)

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகியுள்ளார். 

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கியின் வரலாற்றுப் புனைவான பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் இயக்குநர் மணிரத்னம் நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறார். இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணி, லொகேஷன் பணிகள் நிறைவடைந்து தாய்லாந்தில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சரத்குமார், அஸ்வின், ஆதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கியிருக்க வேண்டிய நிலையில் சில பிரச்சினைகளால் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இதனால் பார்த்திபன் உள்ளிட்ட சிலர் ஏற்கனவே படத்தில் இருந்து விலகிக் கொண்டனர். இந்நிலையில், இப்படத்தில் குந்தவை நாச்சியார் வேடத்தில் நடிக்க இருந்த கீர்த்தி சுரேஷ் படத்திலிருந்து விலகியுள்ளார். பொன்னியின் செல்வனில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ள தேதிகளில் நடிகர் ரஜினியின் தலைவர் 168 படத்தின் படப்பிடிப்பு இருப்பதால் அவர் விலகியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைவர் 168 படத்துக்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory