» சினிமா » செய்திகள்

ரஜினி கூறிய அற்புதம் விரைவில் நடக்கும்: நடிகை மீனா

சனி 14, டிசம்பர் 2019 11:45:26 AM (IST)

ரஜினி கூறிய அற்புதம், அதிசயம் விரைவில் நடைபெறும் என்று நடிகை மீனா பேசினார்.

எஜமான், முத்து, வீரா உள்ளிட்ட படங்களில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ள மீனா 24 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிவா இயக்கும் புதிய படத்தில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். குஷ்பு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். சென்னை காமராஜர் அரங்கில் நடந்த ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று மீனா பேசியதாவது: "ரஜினிகாந்துடன் நிறைய நடிகைகள் நடித்து இருக்கிறார்கள். ஆனால் நான் குழந்தையாக இருந்தபோதே அவருடன் பேசக்கூடிய, நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அது இப்போது வரை தொடர்கிறது என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. மறுபடியும் ரஜினியுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறேன்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்று அவர் சொல்லி இருக்கிறார். இப்போது வரை எப்படி கொஞ்சம் கூட மாறாமல் இருக்கிறார் என்று புரியவில்லை. நான் சின்ன வயதில் எப்படி பார்த்தேனோ, அப்படித்தான் இப்போதும் பேசுகிறார். பழகுகிறார். உண்மையிலே இது வியக்கத்தக்க ஆச்சரியம். இந்த மாதிரி ஒரு மனிதரை நான் என் வாழ்க்கையில் பார்த்தது இல்லை. கண்டிப்பாக பார்க்கவும் முடியாது என்று நினைக்கிறேன். ரஜினிகாந்தை நல்ல நடிகராக, சூப்பர் ஸ்டாராக பார்த்து இருக்கிறோம். அதைவிட மிகப்பெரிய அற்புதத்தை வருங்காலத்தில் பார்ப்பதற்கு, நானும் உங்களை போன்று ரொம்ப ஆவலாகவும், ஆசையாகவும் இருக்கிறேன். அது கூடிய விரைவில் நடைபெறும் என்று நம்புகிறேன்.”இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory