» சினிமா » செய்திகள்

சினிமா டிக்கெட் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை: டி.ராஜேந்தர் வலியுறுத்தல்

சனி 4, ஜனவரி 2020 10:32:04 AM (IST)

ஏழை எளிய நடுத்தர மக்கள் திரையரங்குக்கு வந்து படத்தை பார்க்கும் வகையில் சினிமா டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று டி.ராஜேந்தர் கூறினார்.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள டி.ராஜேந்தர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: "1979-ம் ஆண்டு ஒரு தலை ராகம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி 40 ஆண்டு கால அனுபவத்தை பெற்றுள்ளேன். இந்த அனுபவம் முழுமையாக சினிமாவிற்கு தேவை என்று பலர் வற்புறுத்தியதால் தேர்தலில் நின்று வெற்றி பெற்றேன். மேலும் துணைத்தலைவராக தேர்வான ஸ்ரீனிவாசலு, செயலாளராக தேர்வான டி.மன்னன், இணைச் செயலாளராக தேர்வான கே.காளையப்பன், பொருளாளராக தேர்வான பாபுராவ் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

மத்திய அரசு விதிக்கும் ஜி.எஸ்.டி வரியை தவிர மற்ற எந்த வரியையும் மாநில அரசுகள் விதிப்பதில்லை. தமிழகத்தில் மட்டும் 8 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்படுகிறது. இதற்கு பல தரப்பட்ட சினிமா சங்கத்தினரிடம் கலந்து ஆலோசித்து ஒரு சிறப்பான முடிவை எடுத்து அரசிடம் கோரிக்கையை முன் வைப்போம். டிக்கெட் கட்டணம் முடிந்தவரை குறைக்கப்பட்டு சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் திரையரங்குக்கு வந்து படத்தை பார்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ள கோரிக்கை வைக்கப்படும். தமிழ் சினிமா தற்போது சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு கிடைக்க நாங்கள் முயற்சி செய்வோம்.” இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.

தர்பார் டிக்கெட் குறித்து...

பேட்டியின்போது தர்பார் படத்துக்கான டிக்கெட் விலை ஏற்றம் தொடர்பாக டி.ராஜேந்தரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், ரஜினி சார் ஒரு சூப்பர் ஸ்டார். அவர் தனது அந்தஸ்துக்காக அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார். கமல், அஜித், விஜய் ஆகியோரும் அப்படித்தான். அவர்களுடைய படத்துக்கும், மற்ற நடிகர்களுடைய படத்துக்கும் ஒரே டிக்கெட் விலையைக் கொடுங்கள் என்றால் மக்கள் எப்படி ஒப்புக் கொள்வார்கள்? வெகுஜன மக்கள் திரையரங்கிற்கு வரும் வழி அடைக்கப்பட்டுள்ளது.

சென்னை - செங்கல்பட்டு ஏரியாவில் 2 திரையரங்குகளில் மட்டும்தான் தர்பார் படம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்குள் 1500 ரூபாய்க்கு டிக்கெட் விற்கிறார்கள் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?. அதுமட்டுமல்ல, வட ஆற்காடு - தென் ஆற்காடு ஏரியாவில் இன்னும் அந்தப் படத்தின் வியாபாரம் முடியவில்லை. சினிமாவில் பல பிரச்சினைகள் உள்ளன. நாம் மேலோட்டமாக மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று பதிலளித்துள்ளார் டி.ராஜேந்தர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory