» சினிமா » செய்திகள்

ஹிந்தியில் ஒத்த செருப்பு ரீமேக் : பார்த்திபன் தகவல்

திங்கள் 6, ஜனவரி 2020 11:15:19 AM (IST)

ஹிந்தியில்  ஒத்த செருப்பு படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இயக்குநர் பாக்கியராஜிடம்  உதவி இயக்குநராக இருந்த ரா. பார்த்திபன், புதிய பாதை என்ற படத்தின் மூலம் இயக்குநர் மற்றும் நடிகராக அறியப்பட்டார். இப்படம் வெளியாகி 30 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் புதிய சிந்தனைகளுடன் இளைய இளைஞர்களுக்கு போட்டியாக சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.கடந்த ஆண்டு அவரது இயக்கத்தில் அவரே நடித்து வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்திற்கு பரவலான பாராட்டுகளும் விருதுகளும் கிடைத்து வருகிறது.
 
இந்நிலையில், இப்படத்தினை ஹிந்தியில் ரீமேக் செய்வது குறித்து அவர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,Os7-ஐ ஹிந்தியில் நவாஸுதீன் சித்திக்கை வச்சி செய்ய இருக்குறோம். அதற்கான பேச்சு வார்த்தையின் போது.... என ஹிந்தி நடிகர் நவாசுதீன் சித்திக்குடன் அவர் நிற்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory