» சினிமா » செய்திகள்

தர்பார் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட எதிர்ப்பு!

திங்கள் 6, ஜனவரி 2020 11:23:08 AM (IST)

தர்பார் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட கூடாது என சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். மும்பை போலீஸ் கமிஷனராக ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த ஆக்‌ஷன் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. கர்நாடகாவில் மட்டும் தமிழிலேயே வெளியாகிறது. ஜனவரி 9ம் தேதி தர்பார் வெளியாக உள்ள நிலையில் கர்நாடகாவில் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

ஏற்கனவே கன்னட படங்கள் தவிர்த்த மற்ற மொழி படங்களை வெளியிட கன்னட அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தர்பார் படம் நேரடியாக தமிழில் வெளியிட கூடாது. கன்னடத்தில் டப்பிங் செய்துதான் வெளியிட வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் படத்தை ரிலீஸ் செய்ய விநியோகஸ்தர்கள் தயார் செய்துள்ள நிலையில் இந்த எதிர்ப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory