» சினிமா » செய்திகள்

திரௌபதி படத்தைத் தடை செய்யக் கோரி காவல் ஆணையரிடம் மனு!

திங்கள் 6, ஜனவரி 2020 4:00:13 PM (IST)

திரௌபதி படத்தைத் தடைசெய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ரிஷி ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ் நடிப்பில் மோகன் ஜி. இயக்கியுள்ள படம் - திரெளபதி. இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடகக் காதல் குறித்து படத்தின் மையக்கதை உருவாக்கப்பட்டுள்ளதால் டிரெய்லரில் உள்ள பல வசனங்கள் சமூகவலைத்தளங்களில் விவாதங்களை உருவாக்கியுள்ளது. ஜாதியை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக பார்வையாளர்கள் மத்தியில் ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் எதிர்ப்பும் நிலவி வருகிறது. இந்த நிலையில், படத்தின் போஸ்டரில், பாரதியாரின் கவிதையில் ஒருவரி மாற்றப்பட்டு, சாதிகள் உள்ளதடி பாப்பா… எனக் குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இயக்குனர் மோகன் ஜி கூறியதாவது: ”யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இங்கே ஜாதி என்பது ஆழமாக வேரூன்றி இருக்கிறது. ஆகவே, ஜாதியை வைத்து உயர்வு, தாழ்வு கொள்ளாமல் இருப்பதே முக்கியம். ஆகவே தான், குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்ற பாரதி வரியை அப்படியே சேர்த்திருக்கிறோம்,” என்றார் இந்நிலையில் திரௌபதி படத்தைத் தடைசெய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory