» சினிமா » செய்திகள்

இணையதளத்தில் தர்பார்: தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி!

வியாழன் 9, ஜனவரி 2020 3:48:43 PM (IST)

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த்  நடிப்பில் தயாராகியுள்ள தர்பார் படம் இன்று வெளியானது. 

ரஜினியின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இந்தப் படம் அமைந்துள்ளது. பல்வேறு தரப்பினரும் இந்தப் படம் குறித்து நேர்மறையான விமர்சனம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், பிரமாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட தர்பார் படம் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளதால் இப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
 
மேலும், ரஜியின் ரசிகர்களுக்கும் இது பேரதிர்ச்சியாய் இருப்பதாக இணையதளத்தில் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இந்தப் படத்தை இணையதளத்தில் வெளியிட கூடாது என தயாரிப்பு நிறுவனம் மனு அளித்திருந்த நிலையில், இணையதளத்தில் இப்படத்தை வெளியிடக் கூடாது என உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory