» சினிமா » செய்திகள்

பொன்னியின் செல்வன்:எடையைக் குறைத்த ஜெயராம்

வியாழன் 9, ஜனவரி 2020 5:33:10 PM (IST)

பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகிவரும் நிலையில் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை, திரைப்படமாக பார்க்கவேண்டும் என்ற ஆவல் பலருக்கும் இருக்கிறது. இந்த கனவு படைப்பிற்காக தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் அனைவரும் நீண்டகாலமாகக் காத்திருக்கின்றனர். இயக்குநர் மணிரத்னம் இந்தத் திரைப்படத்தை எடுக்கப்போகிறார் என்று சில வருடங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானதில் இருந்து அதன் மீதான எதிர்பார்ப்பு பலமடங்காக உயர்ந்தது.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி 2-ஆம் தேதி வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இந்தப்படத்திற்கு மணிரத்னம் மற்றும் குமாரவேல் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர். ரசிகர்கள் எதிர்பார்த்தது போன்றே மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இந்தத் திரைப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், அஷ்வின், லால், ரியாஸ் கான், மோகன் ராம், அர்ஜூன் சிதம்பரம், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி எனப் பலர் நடித்துவரும் இந்தப் படத்தில் நடிகர் ஜெயராமும் இணைந்துள்ளார். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கதையில் சரித்திர நாயகர்களாகத் தோற்றமளிக்க நடிகர்கள் அனைவரும் தீவிரமாகத் தயார் செய்துவருகின்றனர்.

அரசர்களாகவும், வீரர்களாகவும் திரையில் தோன்ற தங்கள் உடலைக் கட்டுக்கோப்பாக நடிகர்கள் மாற்றிவரும் போது, தனது கதாபாத்திரத்திற்காக நடிகர் ஜெயராம் 20 கிலோ வரை உடல் எடையைக் குறைத்துள்ளார். இந்த செய்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. படத்தில் தாங்கள் விரும்பி ரசிக்கும் நடிகர்கள் எந்த கதாபாத்திரங்களைக் கையாளப் போகிறார்கள் என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory