» சினிமா » செய்திகள்

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் 2-வது போஸ்டர் வெளியீடு

புதன் 15, ஜனவரி 2020 10:29:45 PM (IST)லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் வெளியானது.

அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் படத்தை தொடர்ந்து, விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  "மாஸ்டர் ” என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்ந்த படத்தில் விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன்தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு டெல்லியிலும், சென்னை பூந்தமல்லியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பள்ளியிலும் நடந்தது. கர்நாடகாவில் உள்ள ஷிமோகா சிறையிலும் முக்கிய காட்சிகளை படமாக்கினர். தற்போது சென்னையில் சிறைச்சாலை அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.

மாஸ்டர் படம் கொரிய படத்தின் கதை என்று தகவல் வெளியானது. இதனை மறுத்த படக்குழுவினர் கொரிய படத்தின் கதையும் மாஸ்டர் கதையும் வெவ்வேறானவை என்றனர்.  இதையடுத்து, ரசிகர்களுக்கான புத்தாண்டு பரிசாக தளபதி-64 என தற்காலிகமாகக் குறிப்பிடப்பட்டு வந்த இப்படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிட்டது. இந்தப் படத்துக்கு மாஸ்டர் என பெயரிடப்பட்டது. இந்நிலையில், மாஸ்டர் படத்தில் செகண்ட் லுக் இன்று (புதன்கிழமை) வெளியாகும் என படக்குழு ஏற்கெனவே அறிவித்தது. அதன்படி, விஜய் ரசிகர்களுக்கான பொங்கல் பரிசாக மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.  இதையடுத்து, விஜய் ரசிகர்கள் வழக்கம்போல் டுவிட்டர் டிரெண்டிங்கில் தெறிக்கிவிடத் தொடங்கியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory