» சினிமா » செய்திகள்

எம்ஜிஆர் தோற்றத்தில் அசத்தும் அரவிந்த் சுவாமி: தலைவி படத்தின் புதிய டீசர் வெளியீடு!

வெள்ளி 17, ஜனவரி 2020 11:21:33 AM (IST)தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக நடித்து வரும் அரவிந்த்சாமியின் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசியலில் கம்பீரமாக வலம் வந்தவர் ஜெயலலிதா. அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மறைவுக்குப் பின் தன்னை அடுத்த தலைவராக நிலைநிறுத்தி 1990-ல் அதிமுக தலைமைப் பொறுப்பேற்ற ஜெயலலிதா 1991-ல் அதிமுக ஆட்சி அமைத்து முதல்வரானார். கட்சியைக் கட்டுப்பாட்டுடன் நடத்திய ஜெயலலிதா, எம்ஜிஆரை விட அதிக வெற்றிகளை அதிமுக பெறக் காரணமாக இருந்தார். 2016-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வென்று ஆட்சி அமைத்து முதல்வரான ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாள் சிகிச்சைக்குப் பின் டிசம்பர் 5-ம் தேதி அன்று மறைந்தார்.

தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு தலைவி என்ற படம் தயாராகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கி வரும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடித்து வருகிறார். அண்மையில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் கடும் விவாதத்தை உண்டாக்கியது. இதனிடையே, இன்று எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக நடித்துவரும் அரவிந்த்சாமியின் லுக்கை வெளியிட்டுள்ளனர். ஜனவரி 26-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து

அருண்Jan 19, 2020 - 09:59:42 AM | Posted IP 108.1*****

நா மொதல்ல டெண்டுல்கர் னு நெனச்சுட்டேன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory