» சினிமா » செய்திகள்

மீடூ-வில் சிக்காதது எனது அதிர்ஷ்டம்: தமன்னா

சனி 18, ஜனவரி 2020 11:42:18 AM (IST)

"மீடூ-வில் சிக்காதது தனது அதிர்ஷ்டம்" என தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா,  கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் தமன்னா. இந்தி படங்களிலும் நடிக்கிறார். சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- "எனக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாக சொல்வதில் உண்மை இல்லை. கடந்த ஆண்டில் கைநிறைய படம் வைத்து இருந்தேன். எனது படங்களுக்கு நல்ல வியாபாரமும் இருந்தது. முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க அவசியம் இல்லை. எனது படங்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம்.

அதை வைத்து படங்கள் இல்லாமல் வீட்டில் நான் சும்மா இருப்பதாக சிலர் பேசி இருக்கலாம். மீ டூ வில் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் பற்றி பலரும் கூறுகிறார்கள். இது சினிமாவில் மட்டும் இல்லை. அனைத்து துறைகளிலும் இருக்கிறது. நான் பாலியல் கொடுமைக்கு ஆளாகவில்லை. அது எனது அதிர்ஷ்டம்.

பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்கள் அழுதுகொண்டிருந்தால் பிரயோஜனம் இல்லை. எதிர்த்து போராடவேண்டும். மீ டூவில் புகார் சொன்னவர்களுக்கு பட வாய்ப்புகள் வராமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. நான் கவர்ச்சிக்காக அழகு சாதனங்கள் பயன்படுத்துவது இல்லை. சாப்பிடும் உணவில் கவனம் செலுத்துவேன். எண்ணெய் உணவுகளை தள்ளிவைக்க வேண்டும். 7 முதல் 8 மணி வரை தூங்க வேண்டும்.” இவ்வாறு தமன்னா கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory