» சினிமா » செய்திகள்

ஒரே நாளில் வெளியாகும் சந்தானத்தின் இரு படங்கள்!

திங்கள் 20, ஜனவரி 2020 12:46:25 PM (IST)ஒரே நாளில் ஒரு கதாநாயகனின் இரு படங்கள் வெளியாவது அதிசயமாகவே நடக்கும். ஆனால் ஜனவரி 31 அன்று சந்தானம் கதாநாயகனாக நடித்த இரு படங்கள் வெளிவரவுள்ளன. 

சந்தானம் நடிப்பில் உருவாகி நீண்ட நாளாக வெளியீட்டுக்குக் காத்திருக்கும் சர்வர் சுந்தரம் படம் ஜனவரி 31 அன்று வெளியாகவுள்ளது. கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வைபவி ஷந்திலியா கதாநாயகியாக நடித்துள்ளார். மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார்கள். கதை எழுதி இப்படத்தை இயக்கியவர், ஆனந்த் பால்கி. பி.கே.வர்மா ஒளிப்பதிவில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

2018 ஜூலை மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு தற்போது வெளிவருகிறது.  பிரபல இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஜய் ஆனந்த், சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள டகால்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கதாநாயகி - ரித்திகா சென், இசை - விஜய் நரைன். இந்தப் படமும் ஜனவரி 31 அன்று வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இணை தயாரிப்பாளராக நடிகர் சந்தானம் உள்ளார். 

இதனால் இவ்விரு படங்களின் விவகாரம், தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் சென்றது. இரு படங்களும் வெவ்வேறு தேதிகள் வெளியாக வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்திய பிறகு இரு தயாரிப்பாளர்களும் தங்கள் முடிவுகளில் உறுதியாக இருந்ததால் ஒரே நாளில் சந்தானத்தின் இரு படங்கள் வெளியாவதைத் தடுக்க முடியாமல் போய்விட்டது. 


மக்கள் கருத்து

vasanthanJan 20, 2020 - 03:26:43 PM | Posted IP 108.1*****

ரெண்டு படமுமே பிளாப்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory