» சினிமா » செய்திகள்

அந்தாதுன் தமிழ் ரீமேக் : மோகன் ராஜா இயக்கத்தில் பிரசாந்த்!!

திங்கள் 20, ஜனவரி 2020 5:13:10 PM (IST)இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற அந்தாதுன் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இப்படத்தினை மோகன் ராஜா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆயுஷ்மன் குரானா, தபு நடித்த அந்தாதுன் திரைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியில் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. தி பியானோ டியூனர் என்ற பிரெஞ்சு படத்தின் தழுவலாக உருவான இந்த படம், வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் வென்றது.

பிரம்மாண்ட வெற்றியால், இந்தப் படத்தை இதர மொழிகள் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டி வந்தனர். அந்த வகையில், தமிழில் இதன் ரீமேக் உரிமையை கைப்பற்ற தனுஷ், சித்தார்த், பிரசாந்த் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இறுதியில் நடிகர் பிரசாந்த் அதனை கைப்பற்றினார். ஆயுஷ்மன் குரானா வேடத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார். இப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜெயம் ரவியின் சகோதரரான இவர், ரீமேக் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர். அவ்வாறு இவர் இயக்கிய பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக தான், அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கை மோகன் ராஜா இயக்கினால் சரியாக இருக்கும் என பிரசாந்த் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory