» சினிமா » செய்திகள்

பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு : ரஜினிக்கு ரோபோ சங்கர் ஆதரவு

வியாழன் 23, ஜனவரி 2020 10:31:19 AM (IST)

பெரியார் குறித்த சர்ச்சை விவகாரத்தில் இயக்குநர் பேரரசு மற்றும் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பெரியார் பற்றி ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வற்புறுத்தி உள்ளனர். "நான் உண்மையைத்தான் சொன்னேன். மன்னிப்பு கேட்க முடியாது” என்று ரஜினி கூறி விட்டார். இதனால் ரஜினி வீட்டை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடந்தன. போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் ரஜினிகாந்துக்கு காங்கிரசை சேர்ந்த நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்தார். ரஜினிகாந்தின் புதிய படத்தில் குஷ்பு நடித்து வருகிறார்.

இதுபோல் நடிகரும், டைரக்டருமான பேரரசு மற்றும் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் ஆகியோரும் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பேரரசு தனது சமூக வலைத்தள பக்கத்தில், "பெரியாரை பற்றி பேசியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டுமானால் இந்து மதத்தையும், இந்து தெய்வங்களையும் இழிவாக விமர்சித்த அனைவரும் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். ரோபோ சங்கர், "தலைவர் எப்போதும் உண்மையே பேசிவிடுகிறார். உண்மையை சொன்னால் ஏன் சிலபேருக்கு எரியுது என்று தெரியவில்லை” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory