» சினிமா » செய்திகள்

83 படத்தின் தமிழ் பதிப்பை கமல்ஹாசன் தயாரிக்கிறார்

சனி 25, ஜனவரி 2020 11:35:37 AM (IST)கபில் தேவ் ஆக ரன்வீர் சிங் நடிக்கும் கிரிக்கெட் போட்டியை கருவாக கொண்ட 83 படத்தை தமிழில் கமல்ஹாசன் தயாரிக்கிறார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமாகிய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், ஒய்நாட் ஸ்டூடியோசும் இணைந்து இந்த ஆண்டின் பெரிய முக்கிய படைப்பான 83 படத்தின் தமிழ் பதிப்பை வழங்குகிறார்கள். இந்திய சினிமாவில் சரித்திரம் படைத்த பன்முகத்தன்மை கொண்ட நாயகனாக விளங்கக்கூடியவர் கமல்ஹாசன். அவருடைய பட நிறுவனம் தயாரிக்கும் மற்றும் வழங்கும் படங்கள் அனைத்தும் எப்போதும் தரமும், தனித்தன்மை கொண்டதாகவும் இருக்கும்.

அந்தவகையில் 83 படத்தை தமிழில் வழங்குவது குறித்து கமல்ஹாசன் கூறியதாவது:-83 படத்தை தமிழில் வழங்குவதில் மிகுந்த பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறேன். வரலாற்றின் வெற்றி பக்கங்களை அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்த கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் திரையில் உருவாக்கி வழங்குவதில் கர்வமும், பெருமையும் கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற சீரிய கருத்தை இந்த தேசத்து மக்களின் மனதில் விதைத்த வகையில், இந்த அணிக்கு சிறப்பு மரியாதை உண்டு.

முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கும் இந்த வெற்றியே சான்று. தன்னம்பிக்கையும், மனத்திடமும் இந்த வெற்றிக்கு ஊக்க மருந்து. பல்வேறு மக்களுக்கு தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியும் தந்த கதை. கபில்தேவ் தலைமையில் மொத்த அணியும் போராடி உலக கோப்பையை வென்ற கதையை நம் மக்களுக்கு தமிழில் அளிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

தொடர்ந்து கதை அம்சம் உள்ள மற்றும் மக்களின் ரசனைக்கு ஏற்ப படங்களை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் தயாரித்து ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பில் சசிகாந்த் இந்த படத்தை வினியோகம் செய்ய உள்ளார். 83 படத்தில் நடிகர் ரன்வீர் சிங் கேப்டன் கபில் தேவ் ஆக நடிக்கிறார். அவருடன் ஏராளமான முன்னணி நடிகர்கள், நடிகைகள் பங்கு பெறுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory